#BIG NEWS:- ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார் எலான் மஸ்க்..! வாங்கியதுடன் ட்விட்டர் சிஇஓ அதிரடி பணிநீக்கம்..!

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருப்பவர் எலான் மஸ்க். இவர் கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.62 லட்சம் கோடி) வாங்குவதாக ஒப்பந்தம் செய்தார். பின்னர் சில வாரங்களிலேயே அதில் இருந்து பின் வாங்கினார்.

ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள், பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள கணக்குகள் உள்பட சில விவரங்களை தரும்படி ட்விட்டர் நிர்வாக குழுவிடம் எலான் மஸ்க் கோரிக்கை விடுத்தார். எலான் மஸ்க் கேட்ட விவரங்களை தர ட்விட்டர் நிறுவனம் மறுத்தால், மேற்கொண்டு ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியாது என்றார். இதனை எதிர்த்து டுவிட்டர் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. ஒப்பந்தத்தை தட்டிக்கழிக்க இது போன்ற காரணங்களை எலான் மஸ்க் கூறுவதாக குற்றம்சாட்டியது.

இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் அக்டோபர் 28-க்குள்(இன்று) ஒப்பந்தத்தை இறுதி செய்ய கெடு விதித்தது.எலான் மஸ்க் வெள்ளிக்கிழமை மாலைக்குள் ட்விட்டர் ஒப்பந்தத்தை 44 மில்லியன் டாலர் உடன்படிக்கையில் முடித்துவிட வேண்டும் அல்லது சட்டரீதியான வழக்கை சந்திக்க நேரிடும் என்று தகவல் வெளியாகியது.

இதையடுத்து, எலான் மஸ்க், நேற்று கலிபோர்னியா மாகணம் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டரின் தலைமையகத்துக்கு கை கழுவும் சிங்க் ஒன்றை சுமந்து சென்று ஆச்சரியப்படுத்தினார்.

இந்நிலையில், இன்று நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி, ஒப்பந்தம் முடிந்து எலான் மஸ்க் ட்விட்டரின் உரிமையாளரானார் என்று தெரிவித்துள்ளது. மேலும், ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் ட்விட்டரின் உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்தார். ஒப்பந்தம் முடிந்தவுடன் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி(சிஇஓ) பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

பராக் மற்றும் நெட் செகல் ஆகியோர் ட்விட்டர் நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்தை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்கள் இனி அங்கே திரும்பமாட்டார்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த முழுவிவரமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.