கேரளா: தலைமறைவாக இருந்த பிஎஃப்ஐ மாநில செயலாளர் – சுற்றிவளைத்து கைது செய்த என்ஐஏ

தலைமறைவாக இருந்த பிஎஃப்ஐ கட்சியின் கேரள மாநில செயலாளர் ரவுப்பை எம்ஐஏ அதிகாரிகள் அவரது வீட்டை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கட்சியை தடை செய்தபோது அக்கட்சியின் பெரும்பாலான தலைவர்களை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த நிலையில் இந்த கட்சியின் கேரள மாநில செயலாளராக இருந்த ரவுப்பை மட்டும் கைது செய்யவில்லை. இதையடுத்து கட்சியை தடை செய்தபோது கேரளாவில் பந்த் அறிவித்து கேரளா முழுவதும் பல்வேறு கலவரங்களை ஏற்படுத்தி அரசு சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினர்.
image
இந்நிலையில் இவரை என்ஐஏ அதிகாரிகள் தேடி வந்தனர். இதையடுத்து பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி கரும்புள்ளி பகுதியில் உள்ள அவரது வீட்டை கண்காணித்து வந்த என்ஐஏ அதிகாரிகள் நேற்று நள்ளிரவு அவரது வீட்டை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதைத் தொடர்ந்து கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டள்ளனர்.
image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கட்சியை தடை செய்தபோது; பல தலைவர்களை தலைமறைவாக செல்ல உதவியது, பல்வேறு கலவரங்களை தூண்டி விட்டது என பல குற்றச்சாட்டுக்கள் இவர் மீது உள்ள நிலையில், இவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.