பெங்களூரில் இருந்து புனே மற்றும் மும்பைக்கு ஆறு அல்லது ஏழு மணி நேரப் பயணத்தில் செல்லும் வகையில் புதிய எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை கட்டப்பட்டு வருகிறது.
சுமார் 699 கிலோமீட்டர் தூரம் கொண்ட மும்பை-பெங்களூர் பயண நேரம் இனி ஏழு மணி நேரமாகக் குறையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
புதிய மும்பை புனே பெங்களூர் அதிவிரைவு நெடுஞ்சாலை சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இதற்கான முறையான பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்க உள்ளது.
நிலம் கையகப்படுத்துதல் போன்ற பணிகள் முடிந்த பின்னர் 2028ம் ஆண்டில் எக்ஸ்பிரஸ் தேசிய நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.