நயன்தாரா விக்கியால் மருத்துவமனைக்கு வந்த சோதனை; என்னவா இருக்கும்?

Nayanthara -Vignesh Shivan surrogacy row: நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவனை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். மேலும் 2 வாரத்திற்கு முன்பு இவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், “நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம். நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். நமது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் என அனைத்து நல்ல வெளிப்பாடுகளும் இணைந்து 2  குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்” என பதிவிட்டிருந்தார்.

ஜூன் மாதம் திருமணமான சூழலில் எப்படி அக்டோபர் மாதமே இவர்களுக்கு குழந்தை பிறந்தது என பலர் கேள்விகளை எழுப்பி இருந்தனர். இதனையடுத்து அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதேசமயம் இவர்கள் வாடகை தாய் விவரகாரத்தில் சில விதிகளை மீறினரா என்றும் கேள்விகள் எழுந்தன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து சுகாதாரச் சார்பில் மருத்துவர் தலைமையிலான 3 குழு விசாரணையை துவங்கியது. அதில் இது தொடர்பாக சுகாதாரச் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது, மேலும் அதில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் மூலமாகவும் குழந்தை பெற்றுக்கொண்டதாக தெரிய வந்திருக்கிறது.

வாடகைத்தாய் சர்ச்சை:
இவர்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன சேர்க்கை கருத்தரிப்பு மற்றும் வாடகைத்தாய் முறைக்கான வழிகாட்டு தொழில்நுட்பம் நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும்,
நயன்தாரா – விக்னேஷ் சிவனின் பதிவு திருமணம் 2016லியே நடைபெற்றிருக்கிறது. மேலும் இந்த சான்றிதழ்களின் உண்மை தன்மையை பதிவுத்துறை உறுதி செய்திருக்கிறது.

அதன்படி கடந்த ஆகஸ்ட் 2020 ஆம் ஆண்டு சினைமுட்டை மற்றும் விந்தனு பெறப்பட்டு கருமுட்டைகள் உருவாக்கப்பட்டு உறைநிலையில் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டு 2021 ஆண்டு நவம்பர் மாதத்தில் வாடகைத்தாய் ஒப்பந்தம் போடப்பட்டதுடன், கடந்த மார்ச் 2022 ஆம் ஆண்டில் கருமுட்டைகள் வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டது. பின் கரு வளர்ந்த நிலையில் இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பெறப்பட்டிருக்கிறது. மேலும் அக்டோபர் 9 ஆம் தேதி நயன்தாரா, விக்கியிடம் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. 

சுகாதாரச் சார்பில் வெளியான சர்ச்சை அறிக்கை:
இதற்கிடையில் ஆவணங்கள் சரியாக இல்லாததால் இவர்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனையை மூட சொல்லி அரசு வெளியிட்டிருக்கும் நோட்டீஸ் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

பொதுவாக ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் முறைகளின் படி மருத்துவமனையில் தம்பதியருக்கு அளித்த சிகிச்சை குறித்த விவரங்கள் மற்றும் வாடகை தாயின் உடல்நிலை குறித்த ஆவணங்கள் முறையாக வைத்திருக்க வேண்டும். ஆனால், இது குறித்து ஆவணங்கள் சரியான வகையில் மருத்துவமனையில் பராமரிக்கப்படவில்லை. எனவே தற்போது அந்த தனியார் மருத்துவமனை ஏன் தற்காலிகமாக மூடக்கூடாது என நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்த விவகாரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.