நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கடந்த 25ஆம் தேதி நள்ளிரவில் 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற தனியார் பேருந்து, பள்ளிபாளையத்தில் இருந்து சேலம் செல்லும் சாலையில் தறிகெட்டு ஓடி சென்டர் மீடியனில் ஏறி சிக்கிக் கொண்டது.
ஓட்டுனரின் தூக்க கலக்கத்தால் நிகழ்ந்த இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்துக்குள்ளான பேருந்தினை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.