வாக்காளர் பட்டியல் திருத்தம்: 4 நாட்கள் சிறப்பு முகாம்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

புகைப்பட வாக்காளர் பட்டியல் திருத்தத்தை, 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இப்பணிகளை கண்காணிக்க, இந்திய தேர்தல் ஆணையம் 10 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமித்துள்ளது. இவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கூட்டங்கள் நடத்துவதுடன், பொதுமக்களை சந்தித்தும் வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்கள் தொடர்பாகவும் ஆய்வு செய்வார்கள். ஆய்வுக்குப்பின், தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிப்பார்கள்.

அதன்படி, தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் அனில் மேஷ்ராம், தொழில்வளர்ச்சி நிறுவன மேலாண் இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன், கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்கழக இயக்குநர் வெ.ஷோபனா, துணிநூல் ஆணையர் மா.வள்ளலார், வேளாண் துறை சிறப்புசெயலர் த.ஆபிரகாம், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக தலைவர் சு.சிவசண்முகராஜா, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன மேலாண் இயக்குநர் சி.நா.மகேஸ்வரன், குறு, சிறு தொழில்கள் துறை சிறப்பு செயலர் ப.மகேஸ்வரி, நில நிர்வாக ஆணையரக கூடுதல் ஆணையர் ச.ஜெயந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், பெயர் நீக்குதலுக்கான சிறப்பு முகாம் நவம்பர் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.