வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சண்டிகர்: சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசுகளின் பொறுப்பு என பிரதமர் மோடி பேசினார்.
ஹரியானாவில் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்களுக்கான ‘சிந்தன் ஷிவிர்’ எனப்படும் சிந்தனையாளர் கூட்டம் நடைபெற்றது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (அக்.,27) துவக்கி வைத்தார். இக்கூட்டத்தின் 2வது நாளான இன்று, பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசுகளின் பொறுப்பு. பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பண்டிகைகளின்போது நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவது மாநிலங்களின் கடமை.
சட்டம் ஒழுங்கு என்பது ஒரு மாநிலத்துடன் நின்று போய்விடக் கூடியது அல்ல, அதனையும் தாண்டியதாக மாறிவிட்டது. நாடு முழுவதும் ஒரே போலீஸ் சீருடை என்னும் யோசனை சாத்தியமா என அனைத்து மாநிலங்களும் ஆலோசிக்க வேண்டும்.
அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து ஒரே போலீஸ் சீருடையை உருவாக்க வேண்டும். இது, போலீசாருக்கு பொதுவான அடையாளத்தை உருவாக்குவதுடன் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement