கனடாவுக்கு வருங்கால கணவருடன் குடிபெயர நினைத்திருந்த பெண்.
திருமண நிச்சயதார்த்தம் முடிந்து உயிரிழந்த சோகம்.
சில மாதங்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் வருங்கால மனைவி மாரடைப்பால் உயிரிழந்தது இளைஞரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியாவில் அமைந்துள்ளது வெர்னோம் நகரம்.
இங்கு வசிப்பவர் லோகன் சவுண்டர்ஸ் (30). இவருக்கு உலகம் முழுவதும் பயணிக்க வேண்டும் என ஆசை ஏற்பட்ட நிலையில் இதுவரையில் 52 நாடுகளுக்கு சென்றுள்ளார்.
அப்படி பிலிப்பைன்ஸ் செல்லும் போது மரியா ஜீ அன் பலாடர் (40) என்ற பெண்ணை பார்த்திருக்கிறார்.
இருவரும் நட்பான நிலையில் காலப்போக்கில் அது காதலாக மாறியது. பின்னர் கனேடிய விசாவை பெற்ற மரியா மூன்று முறை கனடாவுக்கு வந்து ஆறு மாதங்கள் வரை அங்கு தங்கினார்.
Contributed
கடந்த ஜூன் மாதம் லோகன் – மரியாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் அதே மாதம் திடீரென மரியா மாரடைப்பால் உயிரிழந்தார்.
இது குறித்து தற்போது வேதனையுடன் பேசிய லோகன், நாங்கள் திட்டமிட்டபடி, கணவர் மற்றும் தந்தையாக நான் இருப்பதற்குப் பதிலாக 30 வயதில் தனிமரமாகிவிட்டேன்.
கனடாவுக்கு வந்து என்னுடன் வாழ வேண்டும் என மரியா விரும்பியது நடக்காமல் போய்விட்டது.
அவள் என் துணையாக மட்டுமின்றி என்னை உற்சாகப்படுத்தும் பெண்ணாகவும் இருந்தார் என கூறியுள்ளார்.