கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்

கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், ஜி.எம்.நகரை சேர்ந்த முகமது ரியாஸ், ஃபிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

கடந்த ஞாயிற்று கிழமை அதிகாலை 4 மணிக்கு கார் வெடித்த விபத்தில் முபீன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாகமுகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், ஃபிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் உள்பட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அஃப்சர் கான் என்ற நபரும் கைது செய்யப்பட்டார்.

இந்த சூழலில் முதலில் கைது செய்யப்பட்ட 5 நபர்களிடம் முதற்கட்டமாக தனிப்படை போலீசார் கஷ்ட்டடியில் எடுத்து விசாரிப்பதற்காக திட்டமிட்டு, அதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணையின்  அடிப்படையில், 3 நாள் விசாரணைக்கு அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து 3 நாள் விசாரணைக்கு பின்னர் தனிப்படை போலீசார் கோவை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் முன்பாக 5 பேரும் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்கனவே 8-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணையானது நடைபெற்றது.

இந்நிலையில், இந்த வழக்கனது என்.ஐ.ஏ. விசாரிக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.