What to watch on Theatre & OTT: தீபாவளிக்குப் பிறகு இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல்!

தீபாவளிக்கு வெளியானத் திரைப்படங்களுக்கானத் திரையங்குகள் படிப்படியாக குறைந்து வருகின்றன. இந்நிலையில் இந்த மாதம் (அக்டோபர்) கடைசி வாரத்தில் திரையரங்கு மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகும் படைப்புகளின் பட்டியல் இது.

காலங்களில் அவள் வசந்தம் (தமிழ்)

காலங்களில் அவள் வசந்தம்

இன்று அக்டோபர் 28ம் தேதி வெளியாகியுள்ள தமிழ்த் திரைப்படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’. அறிமுக இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் அறிமுக நடிகர்களான கெளசிக், அஞ்சலி நாயர், ஹிரோஷினி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஒரு முக்கோணக் காதல் கதைத் திரைப்படம்.

ராம் சேது (தமிழ்/இந்தி)

ராம் சேது

அபிஷேக் சர்மா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் பாலிவுட் முன்னணி நடிகரான அக்‌ஷய் குமார், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நுஷ்ரத் பருச்சா போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ‘ராம் சேது (Ram Setu)’ அல்லது ‘Adam’s Bridge’ என்று அழைக்கப்படும் ராமர் பாலம் உண்மையா அல்லது கட்டுக்கதையா என்பதைப் பற்றி தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்வதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதன் விமர்சனத்தை கீழேயுள்ள இணைப்பில் பார்க்கலாம்.

Thank God (இந்தி)

Thank God

கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்தி மொழித் திரைப்படம் ‘Thank God’. இந்திரக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் அஜய் தேவ்கன், சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இது ‘Sorte kugler’ என்ற டேனிஷ் திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காகும்.

கந்தடா குடி (Gandhada Gudi) (கன்னடம்)

Gandhada Gudi

இயக்குநர் அமோகவர்ஷா இயக்கத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் முக்கியக் கதாபத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘கந்தடா குடி’. ஆவணத்திரைப்படம் போல உருவாகியுள்ள இது, இன்று அக்டோபர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. புனித் ராஜ்குமாரின் கடைசி படமான இது, அவரின் கனவுப்படமும்கூட!

Har Har Mahadev (மராத்தி, தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம்)

Har Har Mahadev

வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள மராத்தி மொழித் இத்திரைப்பபடமான இன்று அக்டோபர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. அபிஜீத் ஷிரிஷ் தேஷ்பாண்டே இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். மராத்தி மொழியில் இப்படம் சூப்பர்ஹிட்டானதைத் தொடர்ந்து இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

The Invitation (English)

The Invitation

இயக்குநர் ஜெசிகா எம். தாம்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் திரில்லர் திரைப்படம் ‘The Invitation’. இத்திரைப்படம் இன்று அக்டோபர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

இந்த வாரம் OTT-யில் வெளியாகும் படைப்புகள்

Appan (மலையாளம்) (SonyLiv)

Appan

மலையாளத் திரைப்படமான இப்படம் ‘SonyLiv’ ஓ.டி.டி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. இயக்குநர் மஜூ இயக்கியுள்ள இப்படத்தில் சன்னி வெய்ன், கிரேஸ் ஆண்டனி, பாலி வல்சன், அனன்யா, அலென்சியர் லே லோபஸ் நடித்துள்ளனர்.

Pinocchio (Netflix)

Pinocchio

உயிர் பெற்ற பொம்மையின் சாகசங்களையும், அதன் நெகிழ்ச்சியான வாழ்க்கையையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டத் திரைப்படம் ‘Pinocchio’. இத்திரைப்படம் ‘Netflix’ ஓ.டி.டி தளத்தில் கடந்த அக்டோபர் 25ம் தேதி வெளியாகியுள்ளது.

Accident Man – Hitman’s Holiday (Amazon Prime – English)

Accident Man – Hitman’s Holiday

இத்திரைப்படம் ‘Amazon Prime’ ஓ.டி.டி தளத்தில் கடந்த அக்டோபர் 26ம் தேதி வெளியாகியுள்ளது. இயக்குநர்கள் ஜார்ஜ் கிர்பி, ஹாரி கிர்பி ஆகியோர் இப்படத்தை இயக்கியுள்ளனர். ஸ்காட் அட்கின்ஸ், ரே ஸ்டீவன்சன், பெர்ரி பென்சன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Barbarian (Disney Plus Hotstar – English)

Barbarian

சாக் கிரெகர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் திரில்லர் திரைப்படம் Barbarian. இத்திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் கடந்த அக்டோபர் 26ம் தேதி வெளியாகியுள்ளது.

Matriarch (Disney Plus Hotstar – English)

Matriarch

பென் ஸ்டெய்னர் எழுதி, இயக்கியுள்ள ஹாரர் திரில்லர் திரைப்படம் Matriarch. இத்திரைப்படம் ‘Disney Plus Hotstar’ ஓ.டி.டி தளத்தில் கடந்த அக்டோபர் 26ம் தேதி வெளியாகியுள்ளது.

All Quiet on the Western Front (Netflix – English)

All Quiet on the Western Front

முதல் உலகப்போரில் வெஸ்டர்ன் ஃபிரன்ட் படையைச் சேர்ந்த 17 வயது இளைஞரின் ராணுவ அனுபவம் பற்றியத் திரைப்படம் ‘All Quiet on the Western Front’. எட்வர்ட் பெர்கர் இயக்கத்தில் ‘In the West Nothing New’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் ‘Netflix’ ஓ.டி.டி தளத்தில் இன்று அக்டோபர் 28ம் தேதி வெளியாகியுள்ளது.

The Good Nurse (Netflix – English)

The Good Nurse

டோபியாஸ் லிண்ட்ஹோம் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ‘Netflix’ ஓ.டி.டி தளத்தில் கடந்த அக்டோபர் 26ம் தேதி வெளியாகியுள்ளது.

இவை தவிர…

பொன்னியின் செல்வன் (Amazon Prime)

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் உருவான இப்படம், எழுத்தாளர் கல்கியின் கனவுக்குத் திரையில் உயிர்கொடுத்தது. படம் மெகா ஹிட்டான நிலையில், ஒரு மாதம் கழித்து தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. இப்போதைக்கு ரென்டல் முறையில் மட்டுமே படம் வெளியாகியிருப்பதால், ரூ.129 செலுத்திப் படத்தைப் பார்த்துக்கொள்ளலாம். வரும் நவம்பர் 4-ம் தேதி முதல் அனைத்து சந்தாதாரர்களும் இலவசமாகப் பார்க்கலாம்.

நானே வருவேன் (Amazon Prime)

‘நானே வருவேன்’ ஸ்பாட்டில்..

நடிகர் தனுஷ், செல்வராகவன் மற்றும் யுவன்ஷங்கர் ராஜா கூட்டணியில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த ‘நானே வருவேன்’ திரைப்படம் ‘Amazon Prime’ ஓ.டி.டி தளத்தில் நேற்று அக்டோபர் 27ம் தேதி வெளியாகியுள்ளது.

Window Seat (Zee5) (Kannada)

Window Seat

ஷீத்தல் ஷெட்டி இயக்கத்தில் வெளியான கன்னட மொழித் திரைப்படமான ‘Window Seat’ திரைப்படம் ஜி5 ஓ.டி.டி தளத்தில் இன்று அக்டோபர் 27ம் தேதி வெளியாகியுள்ளது.

Sabash Chandra Bose (Amazon Prime – மலையாளம்)

Sabash Chandra Bose

திரையரங்குகளில் வெளியாகியிருந்த மலையாள மொழித் திரைப்படமான ‘Sabash Chandra Bose’ அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேற்று அக்டோபர் 27ம் தேதி வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.