வாஷிங்டன்: நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசியை மர்மநபர்கள் அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சுத்தியலால் தாக்கிய மர்ம நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அமெரிக்க பார்லி., பெண் சபாநாயகர் நான்சி பெலோசி. இவர் சில மாதங்களுக்கு முன்பு, தைவானுக்கு பயணம் செய்து, சீனாவின் எதிர்ப்புக்கு ஆளானவர். இந்நிலையில், நேற்று காலையில், நான்சி பெலோசி வீட்டுக்குள் மர்ம நபர் அத்துமீறி நுழைந்தார்.
மேலும், அவர் கணவர் பால் பெலோசி சுத்தியலால் தலையில் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்.இந்த சம்பவத்தின்போது, நான்சி பெலோசி, வீட்டில் இல்லை என கூறப்படுகிறது.
இதனால், பலத்த காயமடைந்த பால் பெலோசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். , அவர் தலையில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து, தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement