நடிகை பார்வதியும், நித்யாமேனனும் தனது இன்ஸ்டாகிராமில், பாஸிட்டிவ் எனக் காட்டும் ப்ரக்னன்ஸி கிட்டையும் குழந்தைக்கான ரப்பர் நிப்பிளையும் ஷேர் செய்து “வொண்டர் ஆரம்பமாகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மலையாளத்தில் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் பார்வதிக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். தமிழில் தனுஷ் நடித்த மரியான், பூ, பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்திலும் பார்வதி முக்கிய கேரக்டரில் இடம்பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
View this post on Instagram
இந்நிலையில் நடிகை பார்வதி, தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பாஸிட்டிவ் எனக் காட்டும் ப்ரக்னன்ஸி கிட்டையும் குழந்தைக்கான ரப்பர் நிப்பிளையும் ஷேர் செய்துள்ளார். மேலும் “வொண்டர் ஆரம்பமாகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார் பார்வதிக்கு இன்னும் திருமணமாகவில்லை என்ற காரணத்தினால், இந்தப் பதிவு அனைவருக்கும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள் – இரவெல்லாம் உங்களுக்கு தூக்கமில்லையா? உங்களுக்கு இந்த பிரச்னைகள் வரலாம்!
பார்வதி கர்ப்பமாக இருப்பதாக நினைத்து பல ரசிகர்கள் வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்து பகிர்ந்து வந்தனர். பார்வதியை தொடர்ந்து நடிகை நித்யாமேனனும் தனது இஸ்டாகிராமில் பாஸிட்டிவ் எனக் காட்டும் ப்ரக்னன்ஸி கிட் புகைப்படத்தை பகிர்ந்தார். உடனே சில ரசிகர்கள் நித்யாமேனனுக்கும் வாழ்த்துகள் தெரிவித்தனர். ஒரே புகைப்படத்தை நடிகைகள் பகிர்ந்ததால் ரசிகர்கள் குழப்பமடைந்த ரசிகர்கள் அதன்பின்பு புரோமோஷன் என்பதை ரசிகர்கள் புரிந்துகொண்டனர்.
‘ஒண்டர் வுமன்’ திரைப்படத்துக்கான புரோமோஷனுக்காக படத்தை தான் நடிகை பார்வதியும், நித்யா மேனனும் பகிர்ந்துள்ளனர். பிரபல இயக்குனர் அஞ்சலி மேனன் இயக்கவுள்ள இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஒரு படம் புரோமோஷனுக்காக இப்படி எல்லாமா ரசிகர்களை குழப்பத்தில் தள்ளுவது என ரசிகர்கள் ஜாலியாக கிண்டல் செய்து வருகின்றனர்.