சர்வதேச ஜூனியர் ஆக்கி: மலேசியா-ஜப்பான் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது

ஜோஹார்,

6 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது ஜோஹார் கோப்பைக்கான சர்வதேச ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. மலேசியா-ஜப்பான் அணிகள் இடையிலான திரில்லிங்கான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

ஜப்பான் தரப்பில் மசடோ கோபாயாஷி (34-வது நிமிடம்), கேப்டன் இகுமி சாகி (47-வது நிமிடம்) தலா ஒரு கோலும், மலேசியா அணியில் முகமது மமத் (39-வது நிமிடம்), ஷமி இர்பான் சுஹாமி (43-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.