தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலி நடைபெற உள்ள சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண லடசக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். முருகபெருமானின் ஆறுபடை வீடான இரண்டாவது வீடு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முக்கிய விழாக்களில் ஒன்றான கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 5-ம் நாளான நேற்று தீபாராதணைக்கு பின்னர் ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார்.
இந்தநிலையில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை கோயிலின் கடற்கரை வளாகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக யானை தலை, சிங்கத்தலை, சூரனின் தலை ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சூரசம்ஹாரத்தை காண தூத்துக்குடி மாவட்டம் மட்டுமில்லாமல் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூரை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். மேலும் கோயில் வளாகத்தில் தங்கி விரதம் இருந்து வரும் பக்தர்கள் பச்சை ஆடை உடுத்தியும் சிவபெருமான், முருகன், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட வேடங்களை அணிந்தும் தங்களது வழிப்பாட்டை ந்டத்தி வருகின்றனர்.
கோயில் வளாகத்தில் தங்கியுள்ள பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து தொடர்ந்து கண்கானித்து வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சூரசம்ஹாரத்தை ஒட்டி திருச்செந்தூரை சுற்றி பலத்த் அபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் 120 இடங்களில் கண்கானிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்கானிக்கப்பட்டு வருகிறது. வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் சிறப்பு பேருந்துகளுக்கான வாகன நிறுத்தங்கள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.