ஐதராபாத்: தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவரும் அமைச்சருமான கே.டி.ராமாராவ், தனது கட்சியின் அரசியல் குற்றப்பத்திரிகையை நேற்று வெளியிட்டார். அதில், ஒன்றிய பாஜ அரசு மீது சுமத்தப்பட்டிருந்த பல்வேறு குற்றச்சாட்டுகள்:
* சுதந்திரத்திற்குப் பிறகு, கடந்த 67 ஆண்டில் பல்வேறு பிரதமர்கள் ஆட்சியில் நாடு ரூ.55.87 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது.
* கடந்த 2014ல் பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 8 ஆண்டில் மட்டும் ரூ.80 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.
* 2014-15ல் ஒன்றிய அரசின் கடன் வட்டி செலுத்துதல், மொத்த வருவாயில் 36.1 சதவீதமாக இருந்தது. இது 2021ல் 43.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2021ம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 61.6 சதவீதம் ஒன்றிய அரசின் கடன் தொகை தொட்டுள்ளது. இதன் மூலம், ஒன்றிய பாஜ அரசு நாட்டை கடன் வலையில் சிக்க வைத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.