சோமாலிய தலைநகரில் அரசு அலுவலகங்களுக்கு அருகே நேற்று இரண்டு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் ஏராளமானோர் உயிரிழந்தனர்; பலர் காயம் அடைந்தனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில், அல் – ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல் – குவைதாவுடன் தொடர்பில் இருக்கிறது. இந்த அமைப்பு சோமாலிய அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் நாட்டின் தலைநகரான மொகதீசுவில் அரசின் முக்கிய அலுவலகங்கள் உள்ள பகுதியில் நேற்று இரண்டு இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்; பலர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. எனினும் அல் -ஷபாப் அமைப்பு மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்த தாக்குதல் நடந்த போது, அதே பகுதியில் அமைந்துள்ள அதிபர் மாளிகையில் அதிபர், பிரதமர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement