புதுடெல்லி: நாட்டில் இளைஞர்களுக்கு வேலையின்மை மற்றும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பர் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘உத்தரப் பிரதேசத்தில் கிரேட் ‘சி’ பிரிவு பணிக்கு 37 லட்சம் பேர் விண்ணப்பித்த பின்னரும், 40 ஆயிரம் அக்னி வீரர் வேலைக்கு 35 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
நாங்கள் விரக்தியில் இருக்கிறோம், எங்களுக்கு வேறு வழியில்லை என்ற இளைஞர்களின் வேதனை குரலுக்கு அரசு செவி சாய்க்கிறதா? இதுதான் 8 ஆண்டு ஆட்சிக்கு பிறகும் மோடி அரசின் மரபு: ‘வேலையில்லை’ அரசின் கொள்கைகளால் நாட்டின் பொருளாதார நிலை மோசமாகி விட்டது,’ என கூறியுள்ளார்.