விபத்தில் சி்க்கிய முன்னாள் அமைச்சர்களின் கார்கள்… தேவர் ஜெயந்திக்கு போன வழியில் இப்படியொரு துயரம்

தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாக கருதி, இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற தலைவரான முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது தெயந்தி விழா, ராமநாதபும் மாவட்டம், பசும்பொன்னில் இன்று வழக்கம்போல் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது வருகிறது.

இந்த விழாவில் திமுகவின் இன்னாள் அமைச்சர்கள், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரும், பல்வேறு சமூக மக்களும் தேவர் சிலைக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், காமராஜ், பாஸ்கரன் உள்ளிட்டோர் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை காரில் பசும்பொன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர். சிவகங்கையை தாண்டியை மானாமதுரை நெடுஞ்சாலையில் முன்னாள் அமைச்சர்களின் கார்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன.

அப்போது எதிர்பாராதவிதமாக கார் ஒன்று குறுக்கே வந்ததாக தெரிகிறது. இதனால் முன்னாள் அமைச்சர்களின் கார்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த காரின் டிரைவர் அதிர்ச்சியடைந்து பிரேக்கை பிடித்துள்ளார்.

விபத்தை தவிர்க்கும் பொருட்டு அவர் இவ்வாறு செய்திருந்தாலும், நெடுஞ்சாலையில் கார்கள் வேகமாக சென்று கொண்டிருந்தபோது திடீரென பிரேக் பிடித்ததால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பயணித்த கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் முன்னாள் அமைச்சர்களின் கார்கள் உள்பட 6 கார்கள் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதேசமயம், அவர்களுடன் வந்த அதிமுக நிர்வாகிகள் மணிகண்டன், ஜோதிபாசு, கல்யாணசுந்தரம்,மதியழகன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.