Seoul Halloween stampede : தென்கொரிய தலைநகர் சீயோலில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 151 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் இளைஞர்கள், பதின்ம வயதினர் என தெரிய வருகிறது. ஹலோவீன் கொண்டாடத்தின்போது, சியோல் நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இக்கொடுரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று முழுவதும் துக்க அனுசரிக்கப்படும் என தென்கொரிய அதிபர் யூன் சுக்-யோல் அறிவித்துள்ளார். “நடக்கக்கூடாத ஒரு சோகமும் பேரழிவும் சியோல் நகரில் நேற்று நடந்துள்ளது” எனக் கூறி தனது ஆழ்ந்த இரங்கலையும் அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். இதுபோன்று, கூட்ட நெரிசல் காரணமாக நூற்றுக்கணக்காணோர் உயிரிழக்கும் சமீப நாள்களில் அதிகமாகியுள்ளது. அவை குறித்த சிறுதொகுப்பை இங்கு காணலாம்.
அக். 1, 2022: இந்தோனேஷியாவில் 135 கால்பந்து ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அந்நாட்டின் கிழக்கு ஜாவாவில் நடந்த உள்ளூர் கால்பந்து போட்டியில், அரெமா அணியும், பெர்சிபையா சுராபாயா ஆகிய அணிகள் மோதின. அதில், 2-3 என்ற கணக்கில் அரெமா அணி தோல்வியடைந்தது ரசிகர்களை கோபமேற்றியுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் அந்த அணி தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இதை தொடர்ந்து, அவர்கள் மைதானத்தினுள் புகுந்து கலவரம் செய்ததில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அவர்களை போலீசார் கண்ணீர் வெடிகுண்டு வீசி கலைத்தனர்.
மே 28, 2022 : நைஜீரியாவில், போர்ட் ஹார்கோர்ட் போலோ கிளப் என்ற தொண்டு நிறுவன நிகழ்வில் 31 பேர் உயிரிழந்தனர். இலவச உணவு மற்றும் உடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சுமார் 100 பேர் கொண்ட பெரும் திரண்டதால், இந்த சம்பவம் நிகழந்தது.
ஜனவரி 21, 2022: கேம்ரூன் நாட்டில் நடைபெற்ற ஆஃப்ரிக்க கோப்பை கால்பந்து போட்டியைக் காண மைதானத்திற்குள் திடீரென நுழைந்த ரசிகர்களால், நெரிசல் ஏற்பட்டது. அதில், 8 பேர் உயிரிழந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோருக்கு காயமேற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஆரம்பமே இப்படியா? எலான் மஸ்குக்கு கிடைத்த ஷாக்: GM எடுத்த முடிவு
WARNING: GRAPHIC CONTENT – A stampede in South Korea left at least 120 people dead after a crowd poured into an alley in a night-life area of Seoul for Halloween festivities https://t.co/0ZIX4goo8F pic.twitter.com/4aZn6UMdxa
— Reuters (@Reuters) October 29, 2022
ஜனவரி 1, 2022 : இந்தியாவின் காஷ்மீரில் உள்ல வைஷ்ணவி தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 12 பக்தர்கள் உயிரிழந்தனர். 16 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு வைஷ்ணவி தேவியை தரிசிக்க வந்த பக்தர்களால் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
நவம்பர் 5, 2021: அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில், ராப் பாடகர் ட்ராவிஸ் ஸ்காட் இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் 10 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், 11 பேர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டனர்.
WARNING: GRAPHIC CONTENT – A stampede in South Korea killed at least 149 people and injured another 150 when a crowd celebrating Halloween crammed into an alley in the Itaewon area of Seoul https://t.co/ZBB3cKgZYx pic.twitter.com/bSA9SJBmck
— Reuters (@Reuters) October 30, 2022
ஏப்ரல் 30, 2021: இஸ்ரேலில் லாக் பாஓமர் பண்டிகையின்போது, ஆண்டுதோறும் நடைபெறும் யூதர்களின், மெரோன் புனித யாத்திரையில் நெரிசல் ஏற்பட்டது. நிகழ்விற்கு சுமார் ஒரு லட்சம் பேர் வந்திருந்தனர். அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 45 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 22, 2020: இது கரோனா தொற்றின் முதல் அலையின் போது, ஏற்பட்டது. பெரு நாட்டில் கரோனா தொற்று தடுப்பு வழிகாட்டுதல்களின்படி, சட்டவிரோதமாக ஒன்றுகூடுவதைத் தடுக்க இரவில், பார் ஒன்றில் தேசிய காவல்துறை சோதனை நடத்தியது. சோதனையில் தப்பிக்க முயன்றபோது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 13 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
மேலும் படிக்க | ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்! மக்கள் மீது துப்பாக்கிச்சூடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ