பெர்த்: டி20 உலகக்கோப்பையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி 13.5 ஓவர்களில் இலக்கை எட்டி எளிமையாக வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்தார்.