டயானா – கமிலா இடையேயான குறுகிய கால நட்பு.
நட்பு முடிவுக்கு வந்த அந்த தருணம்.
இளவரசி டயானா – கமிலா இடையிலான குறுகிய கால நட்பு மற்றும் அது எப்படி முறிந்தது என்பது தொடர்பான பலருக்கும் தெரியாத தகவல்கள் வெளியாகியுள்ளது.
சார்லஸுக்கும் டயானாவுக்கும் கடந்த 1981ல் திருமணம் நடந்த நிலையில் 1996ல் விவாகரத்து ஆனது. இதன்பின்னர் 2005ல் கமிலாவை சார்லஸ் மணந்தார்.
டயானாவுடனான திருமணத்துக்கு முன்னரே கமிலாவுக்கும், சார்லஸுக்கும் காதல் இருந்தது.
திருமணத்துக்கு பின்னரும் இருவரும் தொடர்பில் இருந்தனர். அதன்படி இது வரலாற்றில் மிகவும் பிரபலமான காதல் முக்கோணங்களில் ஒன்றாகும். கடந்த 1995ல் டயானா அளித்திருந்த பேட்டியில், தன்னுடைய திருமண வாழ்க்கையின் முறிவில் கமிலாவின் பங்கு குறித்து மனம் திறந்து பேசினார்.
என் திருமண வாழ்வில் மூவர் இருந்தோம், கமிலாவையும் சேர்த்து என கூறியிருந்தார்.
இந்த சர்ச்சைக்குரிய விவகாரம் வெளிச்சத்திற்கு வருவதற்கு முன்பு, கமிலாவும் டயானாவும் உண்மையில் நல்ல உறவில் இருந்தனர்.
அவர்களின் குறுகிய கால நட்பைப் பற்றியும் அது எப்படி திடீரென முடிவுக்கு வந்தது என்பதைப் பற்றி காண்போம்.
TIM GRAHAM/GETTY IMAGES/
டயானாவும் கமிலாவும் ஒருபோதும் நெருங்கிய நட்பைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் சார்லஸ் மற்றும் டயானா இருவரும் டேட்டிங் செய்யத் தொடங்கியபோது இருவரும் ஒருவருக்கொருவர் நட்பாக இருந்தனர்.
அந்த சமயத்தில் கமிலாவுக்கு ஆண்ட்ரூ பார்கர் என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
கணவருடனான பிரிவிற்கு பிறகு கமிலா சார்லஸின் நெருங்கிய நண்பராக இருந்தார்.
1980ல் கமிலாவும், டயானாவும் இணக்கமாக இருந்த புகைப்படங்களும் வெளியானது.
சார்லஸ் டயானாவை ஆண்ட்ரூ பார்க்கரின் குடும்ப இல்லமான போலேஹைடுக்கு அழைத்துச் சென்றபோது அவர்கள் அதிக நேரம் ஒன்றாகச் செலவிட்டனர்.
Press Association
டயானா மற்றும் கமிலாவின் நட்பு ஏன் முடிவுக்கு வந்தது?
போலேஹைடுக்கு அடிக்கடி சென்ற போது தான் சார்லஸ் – கமிலாவின் தொடர்பை டயானா அறிய தொடங்கினார், அப்போது தான் கமிலா – டயானாவின் குறுகிய கால நட்பு முறியத் தொடங்கியது.
ஆண்ட்ரூ மார்டனின் 1992 புத்தகமான Diana: In Her Own Words பதிவுகளில் தான் சந்தேகப்பட்ட நேரத்தை டயானா நினைவு கூர்ந்தார்.
அதில், என்னை சுற்றி என் வாழ்வில் யாரோ இருப்பதை நான் உணர்ந்தேன்.
ஆண்ட்ரூ பார்க்கரின் குடும்ப இல்லமான போலேஹைட்டில் இருந்த போது கமிலா, என்னிடம் சார்லஸை இதை செய்ய கட்டாயப்படுத்தாதே, இதை செய்யாதே என கூறியபடி இருந்தார்.
அதாவது சார்லஸ் தனிப்பட்ட முறையில் என்ன செய்கிறார் என்பதைப் பற்றியும், நாங்கள் தனிப்பட்ட முறையில் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றியும் கமிலா அதிகம் தெரிந்து வைத்திருந்தார் என கூறியிருந்தார்.
சார்லஸுடன் டயானாவிற்கு நிச்சயதார்த்தம் ஆன பின்னர், கமிலா டயானாவை மதிய உணவிற்கு அழைத்தார்.
அவர்களின் உரையாடலின் போது என்ன பேசப்பட்டது என்பது யாருக்கும் சரியாகத் தெரியாத நிலையில், என்ன நடக்கிறது என்பதை டயானா உணர்ந்ததால், அவர்களின் நட்பு முடிவுக்கு வந்தது.
PA