கோவை கார் குண்டுவெடிப்பு எதிரொலி: சென்னையில் அனாதையாக நின்ற 1,027 வாகனங்கள் பறிமுதல்

சென்னை; கோவை கார் குண்டுவெடிப்பு எதிரொலி: சென்னையில் அனாதையாக. கேட்பாரற்று நின்ற வாகனங்களை காவல்துறையினர், பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி, இதுவரை 1,027 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல பகுதிகளிலும், வாகன நிறுத்தும் இடங்களிலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேட்பாறின்றி கிடக்கின்றன. இந்த வாகனங்களுக்கு உரிமையாளர்கள் இருக்கிறார்களா, திருட்டு வாகனமா என்று சந்தேகக்கிடமாகவே உள்ளன. இந்த வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என ஏற்கனவே பலர் காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில்,  கோவையில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு மற்றும் அதன் பின்னணியில் நடைபெற்றுள்ள பயங்கரவாத சதி போன்றவற்தைத்  தொடர்ந்து, நகரங்களில் ஆங்காங்கே அனாதைகளாக, கேட்பாறின்றி கிடக்கும் வாகனங்களை காவல்துறையினர் அகற்றி வருகின்றனர். அதன்படி, தமிழகம் முழுவதும் சாலையோரம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிறுத்தப்பட்டும், யாரும் உரிமை கோராத வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று டிஜிபி அனைத்து மாநகர கமிஷனர்கள், ஐஜிக்கள், டிஐஜிக்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில் சென்னை மாநகர காவல் எல்லையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி மாநகரம் முழுவதும் சாலையோரம், குடியிருப்பு பகுதிகள், காலி இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.  , மாநகரம் முழுவதும்  நடத்திய அதிரடி சோதனையில், மயிலாப்பூர், மந்தைவெளி, ராயப்பேட்டை, வேப்பேரி, கோயம்பேடு, சென்ட்ரல், எழும்பூர், வடபழனி, விருகம்பாக்கம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம் என அனைத்து இடங்களிலும் உதவி ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் ரோந்து வாகனங்களில் சுற்றி, நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் அருகே குடியிருப்பு வாசிகளிடம் விசாரணை நடத்தி அதன் பிறகு சம்பந்தப்பட்ட வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் மட்டும் 890 பைக்குகள், 55 ஆட்டோக்கள் மற்றும் 41 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 989 வாகனங்களின் பதிவு எண்களை வைத்து உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

பறிமுதல் செய்யப்படும் வாகனங்களில் உள்ள எண்களைக் கொண்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் 38 பைக்குகள், 2 ஆட்டோக்கள் மற்றும் 14 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 54 வாகனங்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், உரிமை கோராத, முறையான ஆவணங்கள் மற்றும் விவரங்கள் இல்லாத 465 வாகனங்கள் மற்றும் 25 ஆட்டோக்கள் என மொத்தம் 490 வாகனங்கள் குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவு 102ன் கீழ் அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் இதுவரை நடத்திய அதிரடி சோதனையில் மொத்தம் 1,027 வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கை தொடரும் என்று மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மேலும் தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.