புதுடில்லி: சர்தார் வல்லபாய் படேலின் 147 வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சர்தார் வல்லபாய் படேல்:
பிறப்பு:
குஜராத் மாநிலத்தில், அக்., 31, 1875ல், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார், சர்தார் வல்லபாய் படேல். அவரின் பிறந்த நாளை, ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒற்றுமை தினமாக அனுசரிக்கிறது, மத்திய அரசு.இவரது தந்தை பெயர், ஜாவேரிபாய் படேல்; தாய், லாட்பா. இவருடன் பிறந்தவர்கள், மூன்று அண்ணன்களும், ஒரு தங்கை மற்றும் தம்பி. சிறு வயது முதலே படிப்பில் சிறந்த மாணவராக விளங்கினார்.
திருமணம்:
தன், 25வயது வயதில், ‘டிஸ்ட்ரிக்ட் பிளீடர்’ படிப்பை முடித்து, வழக்கறிஞராக தொழில் துவங்கினார். தன், 18வது வயதில், ஜவேர்பா என்ற, 12 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
ஒத்துழையாமை இயக்கம்:
கடந்த, 1920ம் ஆண்டு, நாக்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தார், காந்திஜி. குஜராத் முழுதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒத்துழையாமை இயக்கத்தை பற்றி, மக்களிடம் எடுத்துரைத்தார்.
மார்ச் 12, 1930ல், சத்யாகிரக யாத்திரைக்கு அழைப்பு விடுத்தார், காந்திஜி. இதற்கான கூட்டத்தில், தடையை மீறி கலந்து கொள்ள சென்றபோது கைது செய்யப்பட்டார், வல்லபாய் படேல். மூன்று மாத சிறை தண்டனைக்கு பிறகு, விடுதலை செய்யப்பட்டார்.
பொறுப்பு:
அமைச்சரவையில் பரப்புரை, சமஸ்தானம், உள்துறை என, மூன்று பொறுப்புகளை ஏற்றிருந்தார், வல்லபாய் படேல். சுதந்திரம் அடைந்தபின், சர்தார் வல்லபாய் படேல், துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
அப்போது, நாடு முழுவதும் பல இடங்களில், மன்னராட்சி நடந்து கொண்டிருந்தது. சிதறுண்டு கிடந்த நாட்டை ஒருங்கிணைக்கும் பொறுப்பை உள்துறை அமைச்சரான, சர்தார் வல்லபாய் படேலிடம் ஒப்படைத்தார், பிரதமர் ஜவஹர்லால் நேரு. உள்துறை அமைச்சர் என்ற பெயரில், வல்லபாய் படேல் செய்த இரண்டு காரியங்கள் இன்றளவும் பேசப்படுகிறது.
மரணம்:
அரை நுாற்றாண்டு காலம் பொது வாழ்வில் ஈடுபட்டு வந்த வல்லபாய் படேல், டிச., 15, 1950ம் ஆண்டு, தன் 75வது வயதில், மாரடைப்பால் இறந்தார்.
தலைவர்கள் மரியாதை:
சர்தார் வல்லபாய் படேலின் 147வது பிறந்த தினமான இன்று(அக்.,31) தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், டில்லியில் சர்தார் வல்லபாய் படேலின் உருவப்படத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்தியாவின் இரும்பு மனிதர்
, சர்தார் வல்லபாய் படேலின் அயராத உழைப்பும், இந்தியாவை இணைக்க மேற்கொண்ட இடைவிடாத முயற்சியும், இரும்பு மனிதர் என்பதால், இன்றும், தூண் போல் நிலைத்து நிற்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்