கோவில்பட்டி: கழுத்து அறுபட்ட நிலையில் கணவன் மனைவி சடலமாக மீட்பு – போலீசார் விசாரணை

கோவில்பட்டியில் புதிதாக கட்டி குடிபுகுந்த வீட்டிற்குள் கணவன் மனைவி கழுத்தறுபட்டு சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள பெருமாள் நகரைச் சேர்;ந்தவர்கள் ராஜபாண்டி (41) – பரணிசெல்வி (39) தம்பதியர். ராஜபாண்டி கொத்தனராக வேலை பார்த்து வந்த நிலையில், இவரது மனைவி பரணிசெல்வி, லாயல்மில் காலனியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்த தம்பதிக்கு மனோஜ்குமார் (19) என்ற மகனும், உமாமகேஸ்வரி (15) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், கடன் வாங்கி புதிதாக வீடுகட்டி கடந்த ஜூலை மாதம் குடிபுகுந்த நிலையில், கணவன் மனைவி இடையே பிரச்னை இருந்து வந்தாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று மாலை மகன் மனோஜ்குமார் பெட்டிக்கு கடைக்குச் சென்றுவிட, மகள் உமா வெளியே சென்ற நிலையில், தம்பதியர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.image
இதையடுத்து கடையில் இருந்து வீடு திரும்பிய மனோஜ், வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தால் கதவை தட்டியுள்ளார். வெகுநேரகமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த மனோஜ் அருகில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவலர்கள்; கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது பரணிசெல்வி கழுத்தறுபட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அதே போன்று ராஜபாண்டியும் கழுத்தறுபட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இருவரின் உடலையும் போலீசார் கைப்பற்றிய உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
image
இதைத் தொடர்ந்து கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டிற்குள் கணவன் -மனைவி கழுத்தறுப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது
ராஜபாண்டி தனது மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.