டெல்லி: இந்தியாவில் பல ஆண்டுகளாக தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என சிஏஏவுக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். இலங்கை அகதிகள் குறித்து ஒன்றிய அரசு தனது பதிலில் எதுவும் தெரிவிக்காதது கவலை அளிக்கிறது எனவும் குறிப்பிட்டார்.