சென்னையில் குடிபோதையில் தண்ணீர் தொட்டியின் மீது உறங்கிய வாலிபர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
சென்னை கே.கே. நகர் 62-வது தெருவில் உள்ள வீட்டின் 3வது தளத்தில் வசித்து வந்தவர் குணா. இவர் சினிமா துறையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த குணா, அறையில் மின்விசிறி பழுதாகி இருந்ததால் அருகில் இருந்த தண்ணீர் தொட்டியின் மீது ஏறி படுத்து தூங்கியுள்ளார்.
இதையடுத்து குடிபோதையில் இருந்த குணா எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த குணாவின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் குணாவை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குணா பரிதாபமாக உயிரிழந்து உள்ளார் இதை அடுத்து இந்த சம்பவம் குறித்து கே.கே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.