தென்னாப்பிரிக்க அணியுடனான போட்டியில் ,இந்திய அணி 2022 T20 உலகக் கிண்ண தொடரில் முதல் தோல்வியை சந்தித்துள்ளது.
பிரிஸ்பேனில் நேற்று (30) நடைபெற்ற போட்டியில் ,முன்னாள் சாம்பியன் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா (குரூப் 2) அணிகள் விளையாடின.
நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்கள் பெற்றது.
தென்னாப்பிரிக்க அணி தரப்பில் நிகிடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 134 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி கடைசி ஓவரில் 2 பந்துகள் மீதம் இருக்க 137 ஓட்டங்கள் பெற்று 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மில்லர் ஆட்டமிழக்காமல் 46 பந்துகளில் 59 ஓட்டங்கள் எடுத்தார்.
இதனால் இந்திய அணி இந்த உலகக் கிண்ண தொடரில் முதல் தோல்வியை சந்தித்துள்ளது. தற்போது 5 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்க அணி குரூப் பி பிரிவில் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதேவேளை பிரிஸ்பேனில் நேற்று (30) நடைபெற்ற மற்றொரு போட்டியில் சிம்பாப்வேவுக்கு எதிராக பங்களாதேஷ் அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 150 ஓட்டங்களை மொத்தமாக பெற்றிருந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 147 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
மேலும் இன்று 1.30 மணிக்கு அவுஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையில் போட்டி நடைபெறவுள்ளது.