யாழ் மாவட்ட செயலகத்தில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின், நடமாடும் சேவை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (31) யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்மானது.

நடமாடும் சேவையில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு,பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம், இழப்பீட்டுக்கான அலுவலகம், காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், மாகாண காணி ஆணையாளர் நாயகம் மற்றும் அமைச்சுக்கள் திணைக்களங்களின் அதிகாரிகளின் பங்களிப்புடன் சேவைகள் முன்னெடுக்ப்பட்டன.

இந்த நடமாடும் சேவையில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி திரு.விஜயதாஷ ராஜபக்ஷ, அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா, அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் குமாரி, இழப்பீடுகளுக்கான பணிப்பாளர் நாயகம் எஸ்.எல்.எம். ஹசீம் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், துறை சார் அதிகாரிகள், நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் அதிகாரிகள்  கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.