கோவை கார் வெடிப்பு வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உட்பட 14 பேர் அவரிடம் இருந்த பாரட்டுச் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.
கடந்த 23 ஆம் தேதி அதிகாலை கார் வெடிப்பு நிகழ்ந்த உடன் விரைந்து செயல்பட்டு 148 தடயங்களை சேகரித்ததும் ஐந்து பேரை கைது செய்ததும் பாரட்டுக்கு உரிய செயல் என்று அரசு தெரிவித்து உள்ளது.
மொத்தம் 58 பேர் சான்றிதழுக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும் 14 பேர் மட்டும் சென்னைக்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.