சென்னை : கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாநில அரசுகளின் சட்டங்கள், நன்கொடை வசூலிப்பதை தடுப்பதில்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நன்கொடை வசூலிக்கும் கல்வி நிறுவனங்களின் விவரத்தை தெரிவிக்க இணையதளத்தை உருவாக்கவும் நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளனர்.