தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எல்லாம் ரெடி.. சென்னையில் நாளை ஆலோசனைக் கூட்டம்.. அமைச்சர் முக்கிய அப்டேட்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சுமார் 20 கோடி மதிப்பிலான கலைக் கல்லூரி மற்றும் மருத்துவ கட்டிடங்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்போது தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்து வந்த நிலையில் 11.33 கோடி செலவில் பிள்ளையார் குளம் பஞ்சாயத்தில் புதிய கட்டிடம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருந்த நிலையில் இன்று அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் திருநீறு பூசிக்கொண்ட உதயநிதி!

முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் 6.89 கோடி செலவில் மகப்பேறு வசதிக்காக கூடுதல் கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “சுமார் 20 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் 1 1/2 வருடங்களுக்குள்ளாக கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அமைந்துள்ள பிளவக்கள் பெரியார் அணை, கோவிலார் அணை, சாஸ்தா கோவிலாறு அணை உள்ளிட்டவைகள் நிரம்பி வரும் நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவருடன் ஆலோசனை நடத்தி உரிய நேரத்தில் அணைகளை திறக்க ஏற்பாடு செய்யப்படும்.

வடகிழக்கு பருவமழை குறித்து கூறுகையில், கடந்த 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை ஆரம்பமான நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அவசர ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது” இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.