கள்ளக்குறிச்சி அருகே நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர் இல்ல திருமண விழாவில் திமுக இளைஞரணி செயலாளர்
பங்கேற்பு ; இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் போல் இருக்காதீர்கள் என மணமக்களுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை
சங்கராபுரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் இல்ல திருமண விழா, கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம் அருகேயுள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது. திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.
அப்போது அவர், “கலைஞரும் தமிழும் போலவும், தலைவரும் உழைப்பும் போலவும், ஒற்றுமையாக வாழ வேண்டும். அதேசமயம்
, இபிஎஸ் போல் மணமக்கள் இருந்து விடக்கூடாது” என்று மணமக்களை உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சால் அரங்கம் முழுவதும் கரவொலியுடன் சிரிப்பலை எழுந்தது.
ஒற்றைத் தலைமை யுத்தம் காரணமாக, கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என்று அதிமுக ரெண்டு பட்டுள்ளது. அதேசமயம் ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டியும், கட்சியில் பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவு தமக்குதான் உள்ளதென்றும் கூறி, அதிமுக தலைமைக்கு சொந்தம் கொண்டாடி வருகிறார் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
ஆனால், அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் மேல்முறையீட்டு வழக்கையும், இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள மனுவை காரணம்காட்டி இன்றைக்கும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தாம்தான் என்று உரிமை கொண்டாடி வருகிறார் ஓபிஎஸ்.
சில மாதங்களுக்கு முன்புவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று ஒன்றுமையாக இருந்த ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இன்று எதிரெதிர் துருவங்களாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவர்களை உதாரணமாக காட்டி, மணமக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுரை அளித்துள்ளார் என்பது குறிிப்பிடத்தக்கது.