இன்று திமுக கட்சியின் முதன்மைச் செயலாளரும், தற்போதைய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தமிழ்நாடு பேப்பர் மில்லில் நேரடி ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது,
“தமிழகத்தின் கவர்னர் எதிர்க்கட்சியைப் போல் செயல்படுகிறார். மிக சிறிய விஷயத்தைக் கூட பெரிதாக்குகிறார். தமிழகத்தில் அதிமுக இன்று பிளவுபட்டு உள்ளது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய பாஜக அவர்களை ஒன்று சேர விடாமல் செய்து அவர்கள் இருக்கும் இடத்திற்கு வர முயலுகிறது.
இவ்வாறு தான் இன்றைய நிலை இருக்கிறது. வட மாநிலங்களை போல தமிழகத்திலும் ஒரு இடத்தைப் பிடிப்பதற்கு பாஜக தொடர்ந்து முயற்சி செய்துக் கொண்டு இருக்கிறது. எந்தக் கட்சியிலும் பதவி இல்லை என்று அவர்களிடம் போனால் மாநில அளவில் பதவி தருகிறார்கள். பாஜக தான் அதிமுகவை வேண்டுமென்றே பிரித்து வைத்துள்ளது.
இருவரும் பிரிந்து இருக்கும்போது தமிழகத்தில் தனக்குத் தேவையான இடங்களை பெற்றுக்கொள்ளலாம் என்ற நோக்கத்தில் செயல் படுகிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.