இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி நாளை வெளியீடு!!

இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி நாளை முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நாம் தினசரி பயன்படுத்தும் பணம் பேப்பர் வடிவிலும் உலோக நாணய வடிவிலும் உள்ளது. இதே போல டிஜிட்டல் கோட்கள் (code ) மூலம் உருவாக்கப்படுவது டிஜிட்டல் நாணயங்கள் அல்லது டிஜிட்டல் கரன்சி என்று அழைக்கப்படுகிறது.

இவற்றை அரசாங்கம் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் தயாரித்து வருகின்றன. காகித பணத்திற்கு சமமாக இந்த டிஜிட்டல் பணமும் மதிக்கப்படும்.

டிஜிட்டல் நாணயத்தை ஒரு சில நாடுகள் மட்டும் அங்கீகரித்துள்ளன. இந்தியாவில் 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு நிதியாண்டில் ரூபாய்க்கு இணையான டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கி வெளியிடும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி நாளை முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சோதனை முயற்சியாக மொத்த பரிவர்த்தனைகளுக்காக நாளை முதல் டிஜிட்டல் ரூபாய் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

அதனைத் தொடர்ந்து ஒரு மாதத்தில் சில்லறை பரிவர்த்தனைகளுக்கும் டிஜிட்டல் பணம் நடைமுறைக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.