வடிவேலுவை கைவிட்ட சிம்புதேவன் : யோகி பாபுவுடன் கைகோர்க்கிறார்
2006ம் ஆண்டு சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலுவின் இரட்டை வேடத்தில் வெளியானது 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' . பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் வடிவேலு கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது. இந்த படத்தை தயாரித்த இயக்குனர் ஷங்கர் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க விரும்பினார். அதன்படி அந்த பணிகள் தொடங்கியது. ஆனால் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இயக்குனர் சிம்பு தேவனுக்கும், வடிவேலுவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படம் பாதியில் நின்றது. இதனால் பெரிய நஷ்டத்தை சந்தித்த ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்க. தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவுக்கு ரெட் கார்ட் போட்டது.
பல வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்து விட்டார் வடிவேலு. இது ஒருபுறமிருக்க இம்சை அரசன் படம் பெற்றி பெற்றதற்கு அதன் கதை மற்றும் இயக்குனரும் ஒரு காரணம். அதை நிரூபிக்கும் விதமாக அதேபோன்ற ஒரு காமெடி சரித்திர கதையை யோகிபாபுவை வைத்து இயக்க முடிவு செய்திருக்கிறார் சிம்புதேவன். அண்மையில் யோகி பாபுவை சந்தித்து படத்தின் கதையை சொல்லி ஒப்புதலும் வாங்கியிருக்கிறார்.