நாய் குட்டியை பாலியல் வன்கொடுமை செய்த டெலிவரி பாய்!!

இந்தியாவில் அண்மைக்காலமாக விலங்குகள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதலும் அடிக்கடி நடந்து வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு மஹாராஷ்டிராவில் எருமையை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மும்பையில் நாய் குட்டியை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவாய் பகுதியில் உள்ள உணவக ஊழியர்கள் 6 மாத நாய்க் குட்டி ஒன்றை வளர்ந்து வந்தனர்.

அந்த உணவகத்திற்கு ஆகாஷ் (25) என்ற டெலிவரி பாய் அடிக்கடி வந்துள்ளார். அப்படி ஒரு முறை வந்த போது, நாய் குட்டியை மாலின் பால்கனி பகுதிக்கு கொண்டுசென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த கொடூர செயலை பார்த்த மற்றொரு டெலிவரி ஊழியர் அதனை வீடியோவாக பதிவு செய்து வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக காவல்நிலையத்தில் அவர் புகார் அளிக்கப்பட்டது.

அதன் படி வழக்கு பதிவு செய்த போலீஸார் அந்த இளைஞரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.