ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக அறிக்கை தர காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊர்வலத்தை வரும் 6ம் தேதி நடத்த அனுமதி வழங்கியது குறித்து, நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு, விசாரணைக்கு வந்தபோது ஊர்வலம் நடத்த தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு அனுமதியளிக்க வேண்டும் என டிஜிபி உத்தரவில் கூறப்பட்டுள்ளதால், நீதிமன்ற உத்தரவை மீறி, பல மாவட்டங்களில் அனுமதி மறுக்க வாய்ப்புள்ளதாக ஆர்.எஸ்.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து விசாரணையை வரும் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், இல்லையெனில் நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்கும் என் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.