குன்னூர் மலைப்பாதையில் கவிழ்ந்த கார்; 8 பேர் காயம்… 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!

திருப்பூரைச் சேர்ந்தவர் சுந்தராஜ். நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்பத்துடன் காரில் வந்திருக்கிறார். அனைவரும் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீண்டும் திருப்பூரை நோக்கி கிளம்பியிருக்கின்றனர். குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் குறும்பாடி அருகில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியிருக்கிறது. உள்ளே இருந்தவர்களின் அலறல் சத்தத்துடன் கார் சாலையில் கவிழ்ந்திருக்கிறது. இதைக் கண்ட வாகன ஓட்டுநர்கள், உடனடியாக ஆம்புலன்ஸ், காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். காயத்துடன் காருக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தவர்களை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குன்னூர் வாகன விபத்து

இந்த விபத்து குறித்துப் பேசிய காவல்துறையினர், “திருப்பூர், முருகன் பாளையத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் காரை இயக்கியிருக்கிறார். விபத்து ஏற்பட்டு 8 பேர் காயத்துடன் இருந்தனர். காயமடைந்தவர்களை 5 ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்‌. இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறோம். விபத்துக்கான காரணம் விரைவில் தெரியவரும். விபத்து காரணமாக இந்த சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்தை சீர் செய்தோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.