ஆஸ்திரேலியாவில் இருக்கும் கிறிஸ்துமஸ் தீவிற்கு கடல் பகுதியிலிருந்து ஏராளமான சிவப்பு நண்டுகள் இடம்பெயர்ந்து வருகின்றன.
இதனால் கிறிஸ்துமஸ் தீவில் பார்க்கும் இடங்கள் எல்லாம் சிவப்பு நிற நண்டுகளாக காணப்படுகின்றன. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் தான், நண்டுகளுக்கான இனப்பெருக்க காலகட்டம். இந்த மாதங்களில் சிவப்பு நிற நண்டுகள் காட்டு பகுதியிலிருந்து கடல் பகுதியை நோக்கி கூட்டமாக இடம்பெயர்கின்றன.
இந்தியப் பெருங்கடலுக்குச் சென்ற நண்டுகள் ஒவ்வொன்றும் முட்டைகளை இடும். ஆனால் அவற்றில் அதிகமானவை மீன்கள் போன்ற கடல் உயிரினங்களுக்கு உணவாகி விடுகிறது. அதுபோக மீதம் இருக்கும் நண்டுகள் தான் காட்டிற்கு சென்றடைகிறது.
இதனால் நண்டுகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. குறிப்பாக நண்டுகள் இனப்பெருக்கம் செய்ய கடலுக்குச் செல்வதற்கு பாதுகாப்பான வழி அமைத்து கொடுத்துள்ளனர். அப்பகுதியில் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
அரசின் இந்த செயல்பாடுகள், அங்கிருப்போர் மட்டுமன்றி பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டை பெற்று வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM