பிரபலமான ராயல்ஸில் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் முதலிடம்: பின்னுக்கு தள்ளப்பட்ட சார்லஸ் மன்னர்


வில்லியம் மற்றும் கேட் மிகவும் பிரபலமான அரச குடும்பங்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

54 சதவீதம் பேர் சார்லஸ் மன்னருக்கு வாக்களித்தனர்.

பிரித்தானிய அரச குடும்பத்தின் பிரபலமான ராயலுக்காக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் ஆகிய இருவரும் முதன்மை இடங்களை பிடித்துள்ளனர்.

மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து பிரித்தானிய அரச குடும்பத்தில் பிரபலமானவர் யார் என அறிந்து கொள்வதற்காக சுமார் 1095 பிரித்தானியர்களிடம் மெயில் செய்தி நிறுவனம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது.

பிரபலமான ராயல்ஸில் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் முதலிடம்: பின்னுக்கு தள்ளப்பட்ட சார்லஸ் மன்னர் | William Kate Named Most Popular In RoyalsAFP via Getty Images

இதில் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களை மதிப்பிடவும், ஒட்டுமொத்த நிறுவனம் குறித்த தங்கள் கருத்தை தெரிவிக்கவும் கணக்கெடுப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதனடிப்படையில் நடத்தப்பட்ட புதிய வாக்கெடுப்பில் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோர் மிகவும் பிரபலமான அரச குடும்பங்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

69% ஆதரவுடன் இளவரசர் வில்லியம் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து அவரது மனைவி கேட் 67% இரண்டாவது இடத்திலும், இளவரசி அன்னே 64 சதவீத மக்கள் ஆதரவுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

பிரபலமான ராயல்ஸில் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் முதலிடம்: பின்னுக்கு தள்ளப்பட்ட சார்லஸ் மன்னர் | William Kate Named Most Popular In RoyalsGetty Images

அதே நேரத்தில் 54 சதவீதம் பேர் சார்லஸ் மன்னருக்கு வாக்களித்தனர், பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தை பிடித்தனர், அதைத் தொடர்ந்து இளவரசர் ஆண்ட்ரூவும் உள்ளனர்.


கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனை தாக்கிய 50 ஏவுகணைகள்: மின் நிலையங்களே முதல்குறி என குற்றச்சாட்டு

வில்லியம் மற்றும் கேட் ஆகியோரை விட குறைவான பிரபலமாக இருந்தாலும், பதிலளித்தவர்களில் 41 சதவீதம் பேர் ஹரிக்கு ஆதரவாகவே காணப்பட்டார்கள், மேகன் 32 சதவீத மக்களின் வாக்குகளை பெற்றுள்ளார்.

பிரபலமான ராயல்ஸில் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் முதலிடம்: பின்னுக்கு தள்ளப்பட்ட சார்லஸ் மன்னர் | William Kate Named Most Popular In RoyalsAFP via Getty Images

இளவரசர் ஹரியின் ஸ்பேர் என்ற நினைவு குறிப்பு புத்தகம் அரச குடும்பத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.