ட்விட்டர் நிறுவனத்தை நடத்த எலான் மஸ்கிற்கு சென்னை இளைஞர் ஒருவர் உதவி வருகிறார்.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான பிறகு தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், சிஇஓ பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
முன்னணி ஊழியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை நடத்துவதில் சென்னை இளைஞர் ஒருவர் உதவி செய்து வருவது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் வசித்துவரும் ஸ்ரீராம் கிருஷ்ணன் என்பவர் சென்னையின் பிறந்து பள்ளிக்கல்வியை முடித்தார். பின்னர் அமெரிக்கா சென்றவர் அங்கு கிரிப்டோ மற்றும் வெப் ஸ்டார்ட்அப் முதலீடு சார்ந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக், ஸ்னாப் சாட் போன்ற நிறுவனத்தின் பணியாற்றிய இவர், தற்போது ட்விட்டர் நிறுவனத்தில் தற்காலிகமாக எலான் மஸ்கிற்கு உதவி வருகிறார்.
இது குறித்து ட்விட்டர் மூலம் கருத்து பதிவிட்டுள்ள அவர், அதில் ட்விட்டர் நிறுவனத்தில் தற்காலிகமாக எலான் மஸ்கிற்கு உதவி வருகிறேன். என்னோடு இணைந்து வேறு சிலரும் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
newstm.in