புதுடில்லி :சிறை கைதிகளுக்கு ஓட்டுரிமை அளிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசு, தேர்தல் ஆணையம் ஆகியவற்றுக்கு விளக்கம் கேட்டு, உச்ச நீதிமன்றம் ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆதித்ய பிரசன்னா பட்டாச்சார்யா என்ற சட்டப் பல்கலை மாணவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டதாவது:சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் ஓட்டுரிமை மறுக்கப்பட்டுள்ளது.
‘சிறையில் அல்லது போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளவர் அல்லது கடுங்காவல் தண்டனை பெற்றவர் ஓட்டளிக்க முடியாது’ என, அதில் கூறப்பட்டுள்ளது. இது செல்லாது என அறிவிக்க வேண்டும்; கைதிகளுக்கும் ஓட்டுரிமை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் ரவிச்சந்திர பட், எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement