அனைவரும் உடல் உறைந்து… ரஷ்ய துருப்புகளுக்கு உக்ரைனில் காத்திருக்கும் கொடூர சம்பவம்

1939ல் பின்லாந்தில் படையெடுத்து சென்ற சோவியத் ரஷ்ய துருப்புகள் எதிர்கொண்ட துயரங்கள்

தெருக்களில் சடலங்கள் குவிய, உடல் நடுங்க பதுங்கியிருந்த அகழிகளில் வீரர்கள் உறைந்து மரணமடைந்துள்ளனர்.

விளாடிமிர் புடினின் ரஷ்ய துருப்புகள் உக்ரைனில் இதுவரை எதிர்கொள்ளாத மிகக் கொடூரமான சூழலை இனி எதிர்கொள்ளும் என கூறப்படுகிறது.

போருக்கு எந்தவகையிலும் தயாராகாத ரஷ்ய துருப்புகள் உக்ரைனில் கடும் பின்னடைவை எதிர்கொண்டு வருகிறது.
இருப்பினும், உக்ரைனில் அவர்களால் முக்கிய பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்த முடிந்தது என்றே கூறப்படுகிறது.

அனைவரும் உடல் உறைந்து... ரஷ்ய துருப்புகளுக்கு உக்ரைனில் காத்திருக்கும் கொடூர சம்பவம் | Putin Soldiers Freeze Death Brutal Ukraine Winter

@getty

இந்த நிலையில், ரஷ்ய துருப்புகள் உக்ரைனில் மிக மோசமான சூழலை எதிர்கொள்ள இருப்பதாக கூறுகின்றனர்.
1939ல் பின்லாந்தில் படையெடுத்து சென்ற சோவியத் ரஷ்ய துருப்புகள் எதிர்கொண்ட துயரங்கள் போன்று,

அல்லது 1941ல் ரஷ்யாவை நோக்கி படையெடுத்த ஜேர்மானிய நாஜி படைகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பை தற்போது விளாடிமிர் புடினின் துருப்புகளும் எதிர்கொள்ளும் என்றே தெரிவிக்கின்றனர்.

அனைவரும் உடல் உறைந்து... ரஷ்ய துருப்புகளுக்கு உக்ரைனில் காத்திருக்கும் கொடூர சம்பவம் | Putin Soldiers Freeze Death Brutal Ukraine Winter

@getty

பேரிழப்பை எதிர்கொண்ட அந்த இரு படையெடுப்புகளிலும் விடாமல் கொட்டிய பனிப்பொழிவு வீரர்களின் ரத்தத்தால் சிவந்தது என்றே கூறுகின்றனர்.
தெருக்களில் சடலங்கள் குவிய, உடல் நடுங்க பதுங்கியிருந்த அகழிகளில் வீரர்கள் உறைந்து மரணமடைந்துள்ளனர்.

கடும் குளிர் காரணமாக ராணுவ டாங்கிகளின் இயந்திரங்கள் முற்றாக நின்று போனது. பொதுவாக உக்ரைனில் குளிர் காலங்களில் வெப்பநிலை -31C என மிகவும் சரிவடையும் எனவும் சாதாரணமாக -8C குளிர் காணப்படும் எனவும் கூறுகின்றனர்.

அனைவரும் உடல் உறைந்து... ரஷ்ய துருப்புகளுக்கு உக்ரைனில் காத்திருக்கும் கொடூர சம்பவம் | Putin Soldiers Freeze Death Brutal Ukraine Winter

@getty

மட்டுமின்றி, நாள் ஒன்றுக்கு பொதுவாக 20 அங்குலம் அளவுக்கு பனிப்பொழிவும் இருக்கும் என்கிறார்கள்.
இதனால் போர் முன்னெடுக்கப்படுமா அல்லது ரஷ்ய துருப்புகள் பாதுகாப்பின்றி என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

குளிர் காலம் துவங்க இருக்கும் நிலையில், உக்ரைனில் கடும் மழை கொட்டித்தீர்க்கும் என்றே கூறுகின்றனர்.
கடும் குளிர் மழை அகழிகளை மொத்தமாக சேதப்படுத்தும், இதனால் வீரர்கள் சகதியுடன் போராடும் நிலை வரும்.
தொடர்ந்து வெப்பநிலை சரிவடையும்.

அனைவரும் உடல் உறைந்து... ரஷ்ய துருப்புகளுக்கு உக்ரைனில் காத்திருக்கும் கொடூர சம்பவம் | Putin Soldiers Freeze Death Brutal Ukraine Winter

மழையுடன் கடும் குளிரும் ரஷ்ய வீரர்களை ஸ்தம்பிக்க வைக்கும் என்கிறார்கள் முன்னாள் ராணுவ அதிகாரிகள்.
மேலும், கிரிமியா பாலம் தகர்க்கப்பட்ட நிலையில், ரஷ்ய துருப்புகளுக்கான உதவிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, விளாடிமிர் புடின் திட்டமிட்டபடி உக்ரைனில் போர் முன்னெடுக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
அத்துடன், போர் பல மாதங்களாக தொடர்ந்துவருவதுடன், அதற்கான முடிவு எட்டப்படாததும் விளாடிமிர் புடினுக்கு உள்நாட்டில் எதிர்ப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.