ஜோஹன்னஸ்பர்க் :உகாண்டாவில் இந்தியாவைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவர் போலீஸ்காரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவின் கிஸோரோவில், இந்தியாவைச் சேர்ந்த குண்டஜ் படேல்,24, என்பவர் இரும்புக் கடை நடத்தி வந்தார்.
அங்கு, போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரியும் எலியோடா குமிசாமு, 21, கடந்த 27ம் தேதி படேல் கடைக்குள் புகுந்து, அவர் மார்பில் சரமாரியாக சுட்டு விட்டு தப்பினார். அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அவரை கைது செய்தனர். பலத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு துாக்கிச் செல்லும் வழியிலேயே படேல் உயிரிழந்தார். உகாண்டாவில் உள்ள இந்திய துாதரகத்தின் தலையீட்டிற்குப் பின் போலீசார் கொலை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்; கொலைக்கான காரணம் தெரியவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement