Blue Tick வைத்திருக்கும் பயனாளர்கள் 19 டொலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது
Blue Tick-க்கு புதிய கட்டணம் என்ற தகவல் வெளியாகி பயனாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கிற்கான Blue Tick வைத்திருக்க கட்டணம் வசூலிக்கப்படும் என ட்விட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க், போலி கணக்குகளை நீக்க அதிரடியான மாற்றங்களை கொண்டு வர உள்ளதாக கூறினார்.
அத்துடன் ட்விட்டரின் கணக்குகளை சரிபார்க்கும் செயல்முறை புதுப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிப்படுத்தும் Blue Tick வைத்திருக்கும் பயனாளர்களிடம் மாதந்தோறும் 19.99 அமெரிக்க டொலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Reuters
இந்த தகவலின்படி கட்டணம் தொடர்பான அறிவிப்பு வெளியான 90 நாட்களுக்குள் கட்டணம் செலுத்த தவறினால், பயனாளர்கள் பெயருக்கு அருகில் உள்ள Blue Tick நீக்கப்படும் மாற்றம் கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.
Reuters
இது ட்விட்டர் பயனாளர்களுக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, Blue Tick பயனாளர்கள் தாங்கள் பதிவிட்ட பதிவுகளை edit செய்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக் கொள்ள 4.99 அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.