தமிழக அரசியல் பற்றி இரண்டு பாகமாக படம் இயக்கும் ராம்கோபால் வர்மா
ராம்கோபால் வர்மா எப்போதுமே சர்ச்சையான இயக்குனர். அதிரடி கருத்துக்களை கூறி பரபரப்பு ஏற்படுத்துவார், சர்ச்சையிலும் சிக்குவார். அதேபோல வில்லங்க படங்கள் எடுத்தும் பரபரப்பை ஏற்படுத்துவார். சமீபத்தில் லெஸ்பியன் உறவை பற்றி படம் எடுத்து அந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் கிடப்பில் உள்ளது.
என்.டி.ராமராவ் வாழ்க்கை சினிமா ஆனபோது இவர் லட்சுமி என்டிஆர் என்ற படத்தை எடுத்தார். ஜெயலலிதா வாழ்கை படமானபோது சசிகலா வாழ்க்கையை படமாக்க போவதாக அறிவித்தார். இப்படி அதிரடியாக எதையாவது செய்து கொண்டே இருப்பார். அவரின் அடுத்த அதிரடி தமிழக அரசியல் பக்கம் திரும்பி இருக்கிறது.
தமிழக அரசியலை மையப்படுத்தி வியூகம், சபதம் என்ற பெயரில் படம் இயக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். இது இரண்டு பாகங்கள் கொண்ட படம் என்றும், ஒன்று ஷாக்காக இருக்கும் இன்னொன்று எலெக்ட்டிரிக் ஷாக்காக இருக்கும் என்றும், இது அரசியல் படம் என்றாலும் குறிப்பிட்ட கட்சியை பற்றியோ தலைவரை பற்றியோ இருக்காது என்றும் அறிவித்திருக்கிறார். விரைவில் நடிகர் நடிகைகள் பற்றி அறிவிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.