வடகிழக்கு பருவமழை நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை:
டகிழக்கு பருவமழை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 4ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.