புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலாகிறது.
புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி பைக் ஓட்டுபவர் மற்றும் பயணிப்பவர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். தவறினால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆனால் இந்த உத்தரவு புதுச்சேரியில் பின்பற்றப்படாமல் இருந்தது.
ஹெல்மெட் அணியாததால், கடந்தாண்டில் 84 பேரும், இந்தாண்டில் இதுவரை 74 பேரும் இறந்துள்ளனர்.அதனால், தேசிய சாலை பாதுகாப்பு குழு, புதுச்சேரியில் ஹெல்மெட் கட்டாயம் அணிய நடவடிக்கை எடுக்க மாநில சாலை பாதுகாப்பு குழுவிற்கு உத்தரவிட்டது.
அதை தொடர்ந்து, பைக்கில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்ற அரசின் உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement