வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
வடகிழக்கு பருவ மழை கடந்த 29ம் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
அதன்படி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் காணொளி காட்சி வாயிலாக இன்று காலை 11.45 மணி அளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.