குஜராத்: குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்த துயர சம்பவத்திற்கு மத்தியில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோர்பி நகரில் மச்சூ ஆற்றின் குறுக்கே உள்ள நூற்றாண்டு பழமையான தொங்கு பாலம் ஞாயிறு மாலை 6.30 மணியளவில் இடிந்து விழுந்தது. இன்று துயர சம்பவம் நடந்த அன்றைய தினம் இரவு சுகாதாரத்துறை அமைச்சர் ருஷிகேஷ்பட்டெல் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் குதுகலமாக கொண்டாடியுள்ளார்.
தனது வீட்டில் திரண்ட நண்பர்களுடன் சேர்ந்து அமைச்சர் ருஷிகேஷ்பட்டேல் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகியுள்ளது. அமைச்சர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்துள்ளனர். மேலும் வானவேடிக்கை நடத்தியும் ஆரவாரமாக பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அது தொடர்பான வீடியோவை சமூக வளைதளங்களில் பகிர்ந்து எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். விரக்தியின் உச்சத்திலும் பிஸியாக அமைச்சர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் என விமர்சனங்கள் பதிவிட்டு வருகின்றனர்.